Friday, 6 August 2010

Vithura Neethi - 4 July 30,2010

* Episode : July 30, 2010* 

आनृशंस्याद् अनुक्रोशाद् धर्मात् सत्यात् पराक्रमात्
गुरुत्वात्वयि संप्रेक्ष्य बहून क्लेषान् स्तितक्षते


aanrushansyAt anukrOshAt dharmAt sathyAt parAkramAt
gurutvAt tvayi samprEkshya bahoon klEshAn stitikshatE [33 :15]


In consequence of his inoffensiveness and kindness, his righteousness, love of truth and energy, and his remembering the reverence that is due to thee, Yudhishthira patiently bears innumerable wrongs

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

விதுரன் : அரக்கு மாளிகையில் எரிக்க முற்பட்ட போதும், திரௌபதி மானபங்கப்பட்ட போதும் நீ மௌனம் காத்தாய். தர்மபுத்திரனுக்கு உன்னை விட அதிக வீரம் உண்டு , ஆனால் உன்னிடத்தல் மரியாதையும் உண்டு திருதராஷ்டிரா ! 


आनृशंस्याद् - (தர்மனிடத்தில்)கொஞ்சம் கூட வன்குணம்/கொடுமை கிடையாது

अनुक्रोशाद् - தயையை/கருணை காட்டுகிறான்

धर्मात् - தர்ம சிந்தனை மாறாதவன் (துர்யோதனனும் கர்ணனும் காட்டில்
வேடர்களிடம் பிடிபட்ட போது, யுதிஷ்டிரன் பீமன் அர்ஜுனன் முதலானோர் தான் காப்பாற்றினார்கள்)
सत्यात्- சத்யம் பேச தவற மாட்டான்
पराक्रमात् - விராட பர்வத்தில் நீங்களெல்லாம்(திருதராஷ்ட்ரன்) பசுக்கன்றுகளை கவர முற்பட்ட போது, அவன் பராக்ரமத்தை வெல்ல முற்பட்ட போது உங்களையே அவன்(தர்மன்) தான் காப்பாற்றினான்.

गुरुत्वात् - உன்னை தனக்கு ஆசானாக மதிக்கிறான்.

त्वयि संप्रेक्ष्य बहून क्लेषान् स्तितक्षते - நீ எத்தனை துன்பம் கொடுத்தாலும் எல்லாவற்றையும் பொறுத்து கொள்கிறான் 


धुर्योधने सौबले च कर्णे धु:शासने तथा
येतेश्वर्यमाध्याय कथं त्वं भूतिमिच्छसि

dhuryOdhanE soubalE cha karnE dhu:shAsanE tatha
yEth aishvarmAdhyAya katham tvam bhootimitchasi [33:15]


Having bestowed on Duryodhana and Suvala's son and Karna, and Dussasana the management of the empire, how canst thou hope for prosperity?

எங்கே துர்யோதனனும் கர்ணனும் துச்சாதனனும் உள்ளார்களோ, அது அதர்மத்தின் கூடாரம். அங்கு வெற்றி கிட்டாது. நீ அந்த வெற்றியை எதிர் பார்த்து நாளைக்கு சஞ்சயன் பேசப்போவதாக எதிர்பார்க்கிறாய். கிடைக்காது. அதனால் தூக்கம் வராது.

அடுத்த 15 ஸ்லோகங்களில் யார் அறிவாளி, யார் பண்டிதன் என்று விதுரன் சொல்லப்போகிறார். அடுத்த 10 ஸ்லோகங்களில் யார் முட்டாள் என்று சொல்லப் போகிறார்
.

No comments:

Post a Comment