"பரமாத்மாவை அடைதல் என்னும் புருஷார்த்தத்தை தெரிஞ்சுண்டு இலக்கோடு இருப்பாய்" என்று கீழே பார்த்தோம்.
यथाशक्ति चिकीर्षन्ति यथाशक्ति च कुर्वते
न किंचिद् अवमन्यन्ते (पण्डिता भरतर्षभ) नरा: पण्डित बुध्धय :
Note : Resources differ on the last three words of the slOkA.
swAmi quoted "नरा: पण्डित बुध्धय :" whilst the e-books quoted "पण्डिता भरतर्षभ".
yathāśakti cikīrṣanti yathāśakti ca kurvate
na kiṃ cid avamanyante paṇḍitā bharatarṣabha [33 :21]
They that exert to the best of their might, and act also to the best of their might, and disregard nothing as insignificant, are called wise.They that exert to the best of their might, and act also to the best of their might, and disregard nothing as insignificant, are called wise.
இந்தெந்த மைந்தர்கள் பண்டிதர்கள் என்று கொண்டாடப் படுகிறார்கள். யாரெல்லாம் ?!
यथाशक्ति चिकीर्षन्ति - yathāśakti cikīrṣanti - நமக்கு எவ்வளவு ஷக்தி உள்ளதோ ஆற்றல் உளள்தோ, அது வரைக்கும் தான் ஆசைப்படணும். எனக்கென்னது முடியும் னு தெரிஞ்சினுட்டு, அந்த அளவுக்கு தான் ஆசைப்படணும்,. இல்லேன்னா தப்பிப்போய்விடுவோம் .
यथाशक्ति च कुर्वते - yathāśakti ca kurvate - நமக்கு எது திறமை உண்டோ அதைச் செய்பவனாய்.எனக்கென்ன திறமை இருக்கோ அது வரைக்கும் செயலாற்றி விட வேண்டும்.
न किंचिद् अवमन्यन्ते - na kiṃ cid avamanyante - சின்ன விஷயமா இருந்தா கூட அதை, அவமதிக்கவே கூடாது. பெருமாள் பத்து ரூபாய் கொடுத்தவனையும் லக்ஷ ரூபாய் கொடுத்தவனையும் சமமாகவே பாவிக்கிறார். அவர் பார்ப்பது, இருவரின் பின் இருக்கும் "உள்ளத்தை". அது தூய்மையா, பக்தியோட இருக்கிறதா என்பதே முக்கியம்.
GIST : அப்ப நமக்கிருக்கிற சக்தி - அது வரைக்கும் ஆசைப்பட்டு, அது வரைக்கும் செயலாற்றி,சிறியதாக இருந்தாலும் அவமதிக்காமல் யார் இருக்கிறானோ, அவனைத் தான் பண்டிதன் என்று கொண்டாடுகிறோம்.
யசோதை திரும்பச் சொன்னாள். "சிறுமையின் வார்த்த தன்னை மாவலியிடைச் சென்று கேள். பாலகன் என்று பரிபவம் செய்யேல்". இவன் சின்னவன் சின்னவன்னு பரிகாசம் பண்ணாதே. இந்தச சின்னவன் படுத்தின பாட்டை மகாபலியி சக்ரவர்த்தியிடம் சென்று கேள். குள்ளமான வாமன மூர்தியைப்போய், மூணடி அந்த்ச்சின்னக் காலால அளந்து வாங்கிண்டு, உலகத்தையே திருவிக்ரமானத் தாவி அளந்து, மகாபலி அழிந்தே போனான்.யாரையும் சிறுமையைச் சிந்தனை செய்யாதே. எந்தச் சின்னதும் பயன் படும் என்றாள்.
பெரியாழ்வார் அழகாகச் சொல்கிறார்.
கண்ணன் தவழத் தொடங்கினான். யசோதை அம்புலி மாமாவைக் காட்டி (நிலா) சோறு ஊட்டுகிறாள். அப்பொழுது அம்புலிப்பருவம். "நிலாவ புடிச்சு குடுக்றேன் கண்ணா சாப்டு ! "னு யசோதை சோறூட்ட, நிலா நகர்ந்துண்டே இருந்தது. யசோதைக்கு கோவம் வந்து விட, "நின்முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப்போ" . என் மகன் கோவிந்தன் அவ்வளவு அழகா புழுதி அலைந்து வர்றார். அதை நீ ரசிக்காம, போயிண்டே இருக்கியே ?!"
சந்திரன் திரும்பக்கேட்டார்,"என்ன சின்ன பாலகன்; சிறு பிள்ளை. இவன் தவழுவனாம், நான் எவ்வளவு பெரிய தேவன். நான் நின்னு பார்க்கனுமா ?!"

சிறியனென்று என்னிளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய்*
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள்*
சிறுமைப் பிழைகொள்ளில் நீயும் உன் தேவைக்குரியை காண்*
நிறைமதீ! நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்.
தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத் தவழ்ந்து போய்*
பொன்முகக் கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான்*
என்மகன் கோவிந்தன் கூத்தினை இளமாமதீ!*
நின்முகம் கண்ணுளவாகில் நீஇங்கே நோக்கிப்போ.

(பெரியாழ்வார் திருமொழி )
குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலும் போலேன்;
மரங்கள் போல் வலிய நெஞ்சு வஞ்சனேன், நெஞ்சு தன்னால்
அரங்கனார்க்கு ஆட் செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே
(திருமாலை -27)
பெரியதாக இல்லா விட்டாலும், தன்னாலான ராம கைங்கர்யத்தை குரங்குகளும் அணில்களும் செய்தன. அதைப்போல், எந்த ஒரு விஷயத்தையும் சிறுமையாய்ச் சிந்தனை செயாது நாமும் நம் "ஷக்தி" அறிந்து செயலாற்ற வேண்டும்.

No comments:
Post a Comment