விதுரர் அர்த்தம் தோற்ற ஒரு சிரிப்பு சிரிக்கிறார். உன் சேவகன் , நீ அனுப்பிய தூதுவன் திரும்பி சென்று வருவதற்காக அரசனாகிய நீ பயப்படுகிறாய் என்றால் தவறு உன்னுடையதே !
தூது சென்ற சஞ்சயன் திரும்பி வருவதை குறித்து தூக்கமின்றி வருந்தும் த்ரிதராஷ்டிரனைப் பார்த்து, விதுரன் ஐந்து கேள்விகளை கேட்கிறான்.
अभियुक्तं बलवता दुर्बलं हीनसाधनम
हृतस्वं कामिनं चॊरम आविशन्ति परजागराः [33:13]
abhiyuktaṃ balavatā durbalaṃ hīnasādhanam
hṛtasvaṃ kāminaṃ coram āviśanti prajāgarāḥ
"Vidura said, 'Sleeplessness overtaketh thief, a lustful person, him that hath lost all his wealth, him that hath failed to achieve success, and him also that is weak and hath been attacked by a strong person
(1) चॊरम - திருடனாக இருந்தாலோ
(2)अभियुक्तं बलवता - வலியவர்களுடன் எதிர்த்துக் கொண்டாலோ (மால்யவான், மாரீசன், விபீஷணன் முதலானோர் இராமனைப் பற்றி எடுத்துச் சொன்ன உடன் இராவணனின் கிலி) -
(3)हृतस्वं - சொத்தை பரிகொடுத்தாலோ(பேராசை பெருநஷ்டம்) -
(4) कामिनं - காமத்துக்கு வசப்பட்டாலோ (காதலர்கள் - கங்குலும் பகலும்) -
(5)दुर्बलं हीनसाधनम - தன் கருவிகளை இழந்தாலோ(போரில் அனைத்தையும் இழந்த இராவணனிடம்,"இன்று போய் நாளை வா என்று ராமன் சொல்ல", இராவணனுக்கு அன்றிரவு தூக்கம் போயிற்று)
Gist : இந்த ஐவருக்கும் தூக்கம் வராது. இதில் நீ யார் ? என்று விதுரன் வினவுகிறான்*
No comments:
Post a Comment