Tuesday, 7 September 2010

Vithura Neethi 13 - Aug 12 2010

Episode : Aug 12 2010

கற்க கசடற கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

படிக்காமல் இருத்தல் கூடாது. எந்த சந்தேகத்திற்கும் இடம் வைக்காமல் கற்க வேண்டும். கற்ற பின், அதற்குத் தகுந்தாப் போலே நடக்க வேண்டும். இதைத் தான் விதுரர் திருதராஷ்டிரனுக்கு சொல்கிறார்.

क्षिप्रं विजानाति चिरं शृणॊति; विज्ञाय चार्थं भजते न कामात्
नासंपृष्टॊ वयौपयुङ्क्ते परार्थे; तत् प्रज्ञानं प्रथमं पण्डितस्य


kṣipraṃ vijānāti ciraṃ śṛṇoti; vijñāya cārthaṃ bhajate na kāmāt
nāsaṃpṛṣṭo vyaupayuṅkte parārthe; tat prajñānaṃ prathamaṃ paṇḍitasya [ 33: 22]


He that understandeth quickly, listeneth patiently, pursueth his objects with judgment and not from desire and spendeth not his breath on the affairs of others without being asked, is said to possess the foremost mark of wisdom.

तत् प्रज्ञानं प्रथमं पण्डितस्य - பண்டிதனுக்கு இருக்க வேண்டிய முதல் அறிவு இது.

क्षिप्रं विजानाति - விஷயத்தை இடம் பொருள் ஏவல் அதற்குத் தக்காப்போலே 
சட்டெனப் புரிந்து கொள்ள வேண்டும். 

चिरं शृणॊति - நீண்ட காலத்திற்குக் கேட்க வேண்டும். ஆராய வேண்டும். கண்டேன் சீதையை என்று அனுமன் சொன்ன பின்னரும், இராமன் ஆராய்ந்து கேட்டு முடிவெடுத்தான்.

இற்பிறப்பு என்பதொன்றும் இரும்பொறை என்பதொன்றும்
கற்பெனும் பெயரது ஒன்றும் களிநடம் புரியக்கண்டேன் (
சுந்தர காண்டம் :கம்ப இராமாயணம்)

विज्ञाय च अर्थं भजते न कामात् - எந்த ஒரு விஷயத்தை தெரிந்து கொள்கிறோமோ, தெரிந்து கொண்ட படி நடக்க வேண்டும். ஒழுக்கத்தை கடைப்பிடித்தல்.  (கற்றபின் நிற்க அதற்குத் தக )

न कामात् - வெறும் ஆசைக்காக இல்லமால், இதை சாஸ்திரம் சொல்லியதாகக் கொண்டு முடித்து விட வேண்டும்.


नासंपृष्टॊ वयौपयुङ्क्ते परार्थे - மூன்றாவது மனிதன் விஷயத்திலே, யாரும் கேட்காமல் அபிப்ராயம் சொல்லுதல் கூடாது. ( த்ரிதராஷ்டிரன் கேட்ட பின்னர் தான் விதுரர் சொல்கிறார், அர்ஜுனனும் கண்ணனிடம் கேட்கிறார். கேட்ட பின் தான் கண்ணன் சொல்கிறான். இராவணன் கேட்காமல் விபீஷணன், சீதை, அனுமார், அங்கதன் ஆகியோர் சொன்னார்கள். ஆனால் அந்த வார்த்தை ஏற்றுக் கொள்ளப்பட வில்லை)

GIST : விஷயத்தை உடனே புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்ட விஷயத்தை நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அதை சாத்திரம் சொல்லியாதக் கொண்டு, புரிந்து கொண்ட படி நடக்க வேண்டும். கேட்காமல் அபிப்ராயம் சொல்லுதல் கூடாது. இவை பண்டித லக்ஷணங்கள். 

Sunday, 15 August 2010

Vithura Neethi-11,12 Aug 10,11 2010

Episode : Aug 10,11 2010
"பரமாத்மாவை அடைதல் என்னும் புருஷார்த்தத்தை தெரிஞ்சுண்டு இலக்கோடு இருப்பாய்" என்று கீழே பார்த்தோம். 


यथाशक्ति चिकीर्षन्ति यथाशक्ति च कुर्वते
न किंचिद् अवमन्यन्ते (पण्डिता भरतर्षभ) नरा: पण्डित बुध्धय :


Note : Resources differ on the last three words of the slOkA. 
swAmi quoted "नरा: पण्डित बुध्धय :" whilst the e-books quoted "पण्डिता भरतर्षभ".


yathāśakti cikīrṣanti yathāśakti ca kurvate
na kiṃ cid avamanyante paṇḍitā bharatarṣabha [33 :21]


They that exert to the best of their might, and act also to the best of their might, and disregard nothing as insignificant, are called wise.They that exert to the best of their might, and act also to the best of their might, and disregard nothing as insignificant, are called wise.

இந்தெந்த மைந்தர்கள் பண்டிதர்கள் என்று கொண்டாடப் படுகிறார்கள். யாரெல்லாம் ?! 

यथाशक्ति चिकीर्षन्तिyathāśakti cikīrṣanti - நமக்கு எவ்வளவு ஷக்தி உள்ளதோ ஆற்றல் உளள்தோ, அது வரைக்கும் தான் ஆசைப்படணும். எனக்கென்னது முடியும் னு தெரிஞ்சினுட்டு, அந்த அளவுக்கு தான் ஆசைப்படணும்,. இல்லேன்னா தப்பிப்போய்விடுவோம் . 

यथाशक्ति च कुर्वतेyathāśakti ca kurvate - நமக்கு எது திறமை உண்டோ அதைச் செய்பவனாய்.எனக்கென்ன திறமை  இருக்கோ அது வரைக்கும் செயலாற்றி விட வேண்டும். 

न किंचिद् अवमन्यन्तेna kiṃ cid avamanyante - சின்ன விஷயமா இருந்தா கூட அதை, அவமதிக்கவே கூடாது. பெருமாள் பத்து ரூபாய் கொடுத்தவனையும் லக்ஷ ரூபாய் கொடுத்தவனையும் சமமாகவே பாவிக்கிறார். அவர் பார்ப்பது, இருவரின் பின் இருக்கும் "உள்ளத்தை". அது தூய்மையா, பக்தியோட இருக்கிறதா என்பதே முக்கியம்.

GIST : அப்ப நமக்கிருக்கிற சக்தி - அது வரைக்கும் ஆசைப்பட்டு, அது வரைக்கும் செயலாற்றி,சிறியதாக இருந்தாலும் அவமதிக்காமல் யார் இருக்கிறானோ, அவனைத் தான் பண்டிதன் என்று கொண்டாடுகிறோம். 




பெரியாழ்வார் அழகாகச் சொல்கிறார்.
கண்ணன் தவழத் தொடங்கினான். யசோதை அம்புலி மாமாவைக் காட்டி (நிலா) சோறு ஊட்டுகிறாள். அப்பொழுது அம்புலிப்பருவம். "நிலாவ புடிச்சு குடுக்றேன் கண்ணா சாப்டு ! "னு யசோதை சோறூட்ட, நிலா நகர்ந்துண்டே இருந்தது. யசோதைக்கு கோவம் வந்து விட, "நின்முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப்போ" . என் மகன் கோவிந்தன் அவ்வளவு அழகா புழுதி அலைந்து வர்றார். அதை நீ ரசிக்காம, போயிண்டே இருக்கியே ?!"

சந்திரன் திரும்பக்கேட்டார்,"என்ன சின்ன பாலகன்; சிறு பிள்ளை. இவன் தவழுவனாம், நான் எவ்வளவு பெரிய தேவன். நான் நின்னு பார்க்கனுமா ?!"

யசோதை திரும்பச் சொன்னாள். "சிறுமையின் வார்த்த தன்னை மாவலியி
டைச் சென்று கேள். பாலகன் என்று பரிபவம்  செய்யேல்"இவன் சின்னவன் சின்னவன்னு பரிகாசம்  பண்ணாதே. இந்தச சின்னவன் படுத்தின பாட்டை மகாபலியி சக்ரவர்த்தியிடம் சென்று கேள். குள்ளமான வாமன மூர்தியைப்போய், மூணடி அந்த்ச்சின்னக் காலால அளந்து வாங்கிண்டு, உலகத்தையே திருவிக்ரமானத் தாவி அளந்து, மகாபலி அழிந்தே போனான்.யாரையும் சிறுமையைச் சிந்தனை செய்யாதே. எந்தச் சின்னதும் பயன் படும் என்றாள்.
சிறியனென்று என்னிளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய்*
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள்*
சிறுமைப் பிழைகொள்ளில் நீயும் உன் தேவைக்குரியை காண்*
நிறைமதீ! நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்.

தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத் தவழ்ந்து போய்*
பொன்முகக் கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான்*
என்மகன் கோவிந்தன் கூத்தினை இளமாமதீ!*
நின்முகம் கண்ணுளவாகில் நீஇங்கே நோக்கிப்போ.

(பெரியாழ்வார் திருமொழி )


குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலும் போலேன்;
மரங்கள் போல் வலிய நெஞ்சு வஞ்சனேன், நெஞ்சு தன்னால்
அரங்கனார்க்கு ஆட் செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே



(திருமாலை -27)


பெரியதாக இல்லா விட்டாலும், தன்னாலான ராம கைங்கர்யத்தை குரங்குகளும் அணில்களும் செய்தன. அதைப்போல், எந்த ஒரு விஷயத்தையும் சிறுமையாய்ச் சிந்தனை செயாது நாமும் நம் "ஷக்தி" அறிந்து செயலாற்ற வேண்டும். 

Wednesday, 11 August 2010

Vithura Neethi-10 Aug 09 2010

Episode : Aug 09,2010


यस्य संसारिणी प्रज्ञा धर्मार्थाव अनुवर्तते
 कामाद अर्थं वृणीते यः स वै पण्डित उच्यते


yasya saṃsāriṇī prajñā dharmārthāv anuvartate
kāmād arthaṃ vṛṇīte yaḥ sa vai paṇḍita ucyate [33:20]




He whose judgment dissociated from desire, followeth both virtue and profit, and who disregarding pleasure chooseth such ends as are serviceable in both worlds, is considered wise.


स वै पण्डित उच्यते - sa vai pandita ucyate - அவரே பண்டிதர் என்று கொண்டாடப்படுகிறார்.

(எவர்)यस्य संसारिणी प्रज्ञा - yasya samsārinī prajñā - லௌகீக/ உலக அறிவு/புத்தி - உலக அறிவானது 

धर्मार्थाव अनुवर्तते - தர்மத்திலேயும், அர்த்ததிலேயும் நிலை நிற்கிறதோ 

உலகப்பொது அறிவானது யார் ஒருவனுக்கு தர்மத்திலேயும்,பொருளிலேயும் நிலை நிற்கிறதோ

कामाद अर्थं वृणीते यः - தத்வத்த ஒழுங்கா தெரிஞ்சிண்டு "தனக்கேற்ற" புருஷார்த்தத்தை யார் நிர்ணயித்துக் கொள்கிறானோ அவன் பண்டிதன் என்று சொல்லப்படுகிறான்.
पुरुषै: अर्थत इथि पुरुषार्थ: - ஒரு புருஷனாலே விரும்பப்படுவது எதுவோ அது புருஷார்த்தம். இங்கே புருஷன் என்ற சொல்லுக்கு ஆண்மகன் என்ற பொருள் கிடையாது. ஆத்மா என்று கொள்ள வேண்டும். ஒருத்தொருதரும் எதில் விருப்பபடுகிறானோ அது சரியான விருப்பமா, இது தான் தனக்கேற்ற விருப்பமா என்று புரிந்து கொள்ள வேண்டும். அந்த புருஷார்த்தத்தை முதல்ல நிச்சயம் பண்ணிக்கணும். இலக்கை define பண்ணிக்கலைனா, வாழ்க்கை வாழ்வதே அர்த்தமற்றது.

The place of the goal post is pre-defined in the football game. Though the players play with the ball, their aim is to get the ball to their goal post. The goal post is "set" in their mind. Even when sometimes they kick the ball in opposite direction, their "புத்தி" is keen to take the ball to their respective goal post. கோல் போஸ்ட சட்டு சட்டுனு மாத்திண்டே இருந்தா, ஆட்டம் நடக்காது. மொத்த ஆட்டமும் வீண்.

வாழ்க்கை என்னும் பெரும் விளையாட்டு. இந்த ஆட்டத்தில் நம்முடைய கோல் போஸ்ட் எது ?! பால்-ஐ எங்க கொண்டு போய் எப்படி அடிக்கணும் இத நாம சரியாய் தெரிஞ்சுடனும். அதனால் தான் "புருஷார்த்தத்தை" முதல்ல நாம நிர்ணயம் பண்ணினுடனும். இது தான் நான் விரும்பத் தக்கது. இதை தான் நான் அடைய வேண்டும் என்று நிர்ணயம் பண்ணிவிட்டு அதுக்குத் தகுந்தாப்ல தான் நடக்கணும். நாம என்ன விருப்பபடுறோம், அந்த விருப்பம் நமக்கு ஏற்றது தான, இதை அடையறதுக்கு தான் நாம் செய்ற ஒவ்வொரு செயலும் பயன் படறதா ?! இதுக்கு குறுக்க நாம எதையும் வர விடறோமா ?!

துரோணர் அம்பை குறி வைக்கச் சொல்லும் போது, இலக்கை நோக்கிச் சரியாகக் குறி வைத்த அர்ஜுனனை மட்டுமே அம்பெய்யச் சொன்னார். அர்ஜுனனும் இலக்கை எட்டினான். அது போல், நமக்கும் ஒரு இலக்கு இருந்தால், புத்தி அதில் தான் இருக்க வேண்டும். அதைச் சரியாக வரையறுத்துக் கொள்ள வேண்டும். கண்ட கண்ட விஷயத்தில் முயற்சியை வீணடித்தால், நிறைய விஷயங்கள் மட்டுமே சேர்க்கலாம். We got to be focussed.

குறைச்சலான லட்சியம் வெச்சுண்டு, நிறைவா உழைக்கணும்.

விருப்பு வெறுப்புக்கள் ( புருஷார்த்தம்) ஒருவருக்கொருவர் வேறுபடும். 

1. இராமன் காட்டிற்குச் செல்வதற்கு முன்னால், சீதை "எது நரகம் ? எது சொர்க்கம்" என்று வினவ, இராமன் பிரசங்கித்தான். மாறாக சீதை, " உன்னோடு சேர்ந்திருந்தால் சொர்க்கம். உன்னை விட்டுப் பிரிந்தாலே நரகம்" என்றாள்.
2.நம்மாழ்வாரோ "நரகத்தை நகு நெஞ்சே"[10:06] என்று சம்சாரமே நரகம் என்கிறார்.
எனவே, நம்மை யார் என்று நினைத்துக் கொள்கிறோமோ,யார் என்று புரிந்து கொள்கிறோமோ அதற்கேற்றார்ப் போல் மாறுபடும்.

There are three types in this.
1.ऐश्वर्यार्थी
2a. कैवल्यार्थी
2b.भगवल्ला भार्थी


1.ऐश्वर्यार्थी -  உடலே ஆத்மா என்று சொன்னால் "கண்டதே காட்சி, கொண்டதே கோலம்" என்று settle ஆயிடுவோம். உலக இன்பமே புருஷார்த்தம் ஆயிடும். இது ऐश्वर्यार्थी.
உடல் வேறு ஆத்மா வேறு,உடலைக்காட்டிலும் உயர்ந்தவன் ஆத்மா என்று கொண்டால்,
இதற்கு மேல் இரண்டு வகைகள் உண்டு.

2a. कैवल्यार्थी -If we think we are svathanthrAtmA - independent aatmA, then பெருமாளை அனுபவிக்க ஆசை இல்லை. உடல் மேலும் ஆசை இல்லை. இதற்கு கைவல்யானுபவம் என்று பெயர். இதுவும் தாழ்ந்த வழி. ஆத்மா வை அனுபவித்தே காலத்தை கழித்து விடுவோம். 

2b.भगवल्ला भार्थी
இல்லை , நான் paramAthmA/sarvAthmA dependent ஜீவாத்மா. பரமாத்வாவிற்கு அடிமையான ஜீவாத்மா. நித்யம் ஆனந்த மயமான ஜீவாத்மா. ஆத்மா பரமாத்மாவை அடைந்து, வைகுந்தப் ப்ராப்தி ஏற்பட்டு அவனுக்கும் அவன் அடியார்களுக்கும் அங்கு தொண்டு புரிந்து கொண்டே வாழ்வது. இது மிக உயர்ந்தது.

இதை ஒரு மனிதன் நன்றாக புரிந்து கொள்வானே ஆனால், அவனைத் தான் பண்டிதன் என்று கொண்டாடுகிறோம்.

Saturday, 7 August 2010

Vithura Neethi - 9 Aug 06,2010

Episode : Aug 06,2010


यस्य कृत्यं न विघ्नन्ति शीतमुष्नं भयं रतिः
समृद्धि: असमृद्धिर्वा स वै पण्डित उच्यते

yasya kṛtyaṃ na vighnanti śītam uṣṇaṃ bhayaṃ ratiḥ
samṛddhir asamṛddhir vā sa vai paṇḍita ucyate [33 :19]

He whose proposed actions are never obstructed by heat or cold, fear of attachment, prosperity or adversity, is considered wise.

स वै पण्डित उच्यते - இவன் பண்டிதன் என கொண்டாடப்படுகிறான்
யார் ஒருவனுடயோ செயலை இவை இவை எல்லாம் தடுப்பதில்லையோ, பாதிப்பதில்லையோ, அவன் பண்டிதன் என கொண்டாடப்படுகிறான்.
शीतम् - குளிர்ச்சி 
उष्नं - வெப்பம் 
வெப்பமோ குளிர்ச்சியோ யார் ஒருவனுடைய செயலை பாதிப்பதில்லையோ அவனே பண்டிதன்
भयं - பயமோ
रतिः -செய்யும் காரியத்தின் லட்சியம் சாமான்ய உலக இன்பத்துக்காக இல்லாமால்,ஆத்மா சாக்ஷாகாரத்திர்க்காகவும் ப்ருஹ்ம இன்பத்துக்காகவும் இருக்க வேண்டும். அதீதமான விருப்பம்/பற்றுதல் அந்த செயலை பாதிக்கக் கூடாது.

समृद्धि: असमृद्धि: - இந்த செயலாலே செல்வம் கிடைத்தாலும், செயல் கிட்டாமல் போனாலும், அந்த செயல் பாதிக்கப்படக் கூடாது 

வெப்பம்,குளிர்ச்சி என்னும் இரண்டோ
பயம்,விருப்பம் என்னும் இரண்டோ
செல்வம்,வறுமை என்னும் இரண்டோ
இந்த எதுவுமே எவன் ஒருவன் செய்யும் செயலை பாதிக்காதோ, அவனே பண்டிதன்.

ராமனுக்காக சீதையைக் கண்டு,ராமனைப் பற்றிய செய்தியைச் சொல்லி, சீதையின் இருப்பிடத்தை சீக்கிரம் திரும்பி வந்து ராமனிடம் தெரிவிக்க வேண்டும் என்னும் பெரிய லட்சியத்தோடு மகேந்திர பர்வதத்தின் உச்சியில் இருந்து ஆஞ்சநேயர் தாண்டினார். அப்போது நடுக்ககடலில் செல்லும் ஆஞ்சநேயருக்கு உதவி செய்ய மைனாகன் என்று ஒரு மலை நின்றது. ஆஞ்சநேயரின் தந்தையாகிய வாயு பகவானின் நண்பரான மைனாக மலையின் உதவியை நிராகரித்து விட்டு ஆஞ்சநேயர் இலக்கை நோக்கி பயணித்தார். "நான் அவசரமா ஒரு காரியத்துக்கு போயின்றுக்கேன் , வரச்சே உம்ம பாக்கறேன் என்று அவரையும் புண்படுத்தாமல் காரியத்தையும் நிறுத்தாமல் நேரே பறந்தார்"

அடுத்து, சுரதா என்னும் நாக கன்னிகை, ஆஞ்சநேயரை பரீக்ஷை பண்ணுவதற்காக, தன் பெரிய வாய்க்குள் புகுந்து தான் போக வேண்டும் என்று சொல்ல, சட்டென சிறிய உருவம் எடுக்க முடிவெடுத்து வாய் வழி புகுந்து காது வழி கடந்து சென்றார். 

GIST : வேண்டியவர்கள் குறுக்க வருவதும் கூடாது. வேண்டாதவர்கள் வருதலும் கூடாது. இப்படி, எடுத்த செயலில் மட்டும் இலக்குடையவனாய் , வெப்பமோ குளிர்ச்சியோ,லாபமோ அலாபமோ, விருப்பமோ பயமோ- இதனால் பாதிக்கப்படாமல் இருப்பவனே பண்டிதன் என சொல்லப் பெறுகிறார், என்று அடுத்த அடையாளம் சொல்கிறார்.

Vithura Neethi - 8 Aug 05 2010

Episode: Aug 05 2010

यस्य कृत्यं न जानन्ति मन्त्रं वा मन्त्रितं परे
कृतम् एवास्य जानन्ति स वै पण्डित उच्यते [ 33 :18]

yasya kṛtyaṃ na jānanti mantraṃ vā mantritaṃ pare
kṛtam evāsya jānanti sa vai paṇḍita ucyate


He whose intended acts, and proposed counsels remain concealed from foes, and whose acts become known only after they have been done, is considered wise.


स वै पण्डित उच्यते - இவனைத் தான் பண்டிதன் என உலகம் கொண்டாடும் !

 (யாரை ?) यस्य कृत्यं न जानन्ति - அவன் என்னென்ன பண்ணிக்கொண்டிருக்கிறான், என்னென்ன பண்ணி இருக்கிறான், என்று ஊருக்கு தெரியாமல் ரகசியமாக இருக்கிறதோ. அவன் செய்பவை (யாருக்கும்) தெரியாமல் இருக்கிறது. 

मन्त्रं वा मन्त्रितं परे - ஒரு  காரியத்தை இன்ன  வழியின் படி தான் இவர் செய்வார், இந்த  சாதனத்தைக்  கொண்டு  முடிப்பார்  என்று உலகத்துக்கு தெரியாமல் இருக்கிறதோ 

कृतम् एवास्य जानन्ति - ஆனால் அந்தச் செயலை அவர் செய்து முடித்த பிறகு அதனால் பயன் உலகத்திற்கு தான் அல்லவா ?! ( A marketing department's / phD labs' secret will never be revealed. But their resulting research is important). ஆன்மீகமோ, லௌகீகமோ எந்த ஒரு செயலையும்  "தண்டோரா" போடக்கூடாது. 


GIST : ஆக, நாம் செய்வது ரகசியமாக  இருக்க வேண்டும். அதன் பயனை உலகம் அனுபவிக்கும் போது தான் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அவனே பண்டிதன்.

Friday, 6 August 2010

Vithura Neethi - 7 Aug 04,2010

* Episode : Aug 04, 2010* 

क्रूधो हर्षस्च दर्पश्च ह्रीस्तम्भो मान्यमानिता
यमर्थान्नापकर्षन्ति स वै पण्डित उच्यते

krodho harṣaś ca darpaś ca hrīstambho mānyamānitā
yam arthān nāpakarṣanti sa vai paṇḍita ucyate [33:17]

He whom neither anger nor joy, nor pride, nor false modesty, nor stupefaction, nor vanity, can draw away from the high ends of life, is considered as wise

இந்த இந்த குணங்கள் எல்லாம் யார் ஒருவனை நேர் வழியில் இருந்து நகர்த்தாதோ, அவன் தான் மிகச் சிறந்த பண்டிதன்.

சிற்றின்பங்கள் புருஷார்த்தம் இல்லை. இறைவன் தான் புருஷார்த்தம் என்று தெரிந்தவன் பண்டிதன். இறைவனை அடைவதை இலக்காகக்கொண்டால்
அதை அடைய ஒட்டாமல் இப்போ கொடுக்கப் போகிற LIST தடுத்துண்டே இருக்கும். 

(1)क्रोध: - கோபம் - கோபத்தை கட்டுப்படுத்தாதவன் பண்டிதன் ஆக முடியாது 

(2)हर्षं - பேரானந்தம் - இறைவனை அடைவதற்கு மட்டுமே பேரானந்தப் பட வேண்டும். சிற்றின்ப பேருவகை கூடாது 

(3)
दर्पश्च - கர்வம் - எந்த விஷயத்திலும் கர்வம் கொள்ளுதல் இறைவனை அடைவதை தடுக்கும் 

(4)
ह्री: - வெட்கம் - முன்னோர்கள் காட்டிய வழியை மீறுவதற்கு வெட்கப்பட வேண்டும். திருமண் இட்டுக்கொள்வதற்கு எல்லாம் வெட்கப்பட்டால் அது பகவானை அடைவதைத் தடுக்கும் 

(5)स्थम्भ: - திமிர் - எவரையும் மதிக்காமல் தன் இஷ்டத்துக்கு செய்தல்
(6)मान्यमानिता - நானே தெய்வம், நானே பூஜ்யன் என்று சொல்லல்.

GIST : ஆக, (1)அதிமாகக் கோபப்படாதவன், (2)அதிகம் இன்பப்பட்டு குதிக்காதவன் , (3)கர்வம் இல்லாதவன், (4)வெட்கம் இல்லாதவன், (5)திமிர் இல்லாதவன்,(6)தானே தெய்வம் என்று சொல்லிகொள்ளதாவன் -- இவன் தான் பண்டிதன் என்று கொண்டாடப்படுகிறான். 


நாம ஒருத்தொருதொரும் இதன் படி இருந்து பண்டிதர்கள் ஆக வேணும்.

Vithura Neethi -6 Aug 03 2010

* Episode : Aug 03, 2010* 

निषेवते प्रशस्तानि निन्दितानि न सेवते
अनास्तिकः श्रध्धान एतत पण्डित लक्षणम


niṣevate praśastāni ninditāni na sevate
anāstikaḥ śraddadhāna etat paṇḍita lakṣaṇam [33:16]


These again are the marks of a wise man, viz., adherence to acts, worthy of praise and rejection of what is blamable, faith, and reverence.

(1)निषेवते प्रशस्तानि- வேத வாக்யங்களில் எது சிறப்புடையதாக கொண்டாடப்படுகிறதோ அதை அத்தனையும் செய்பவனாய்

(2)निन्दितानि न सेवते - வேதம் எதை செய்யாதே என்று சொல்கிறதோ, அதைச் செய்யாமல் இருப்பவனாய் 

(3)अनास्तिकः - நாஸ்திகனாக இருத்தல் கூடாது.சாஸ்திரம் உண்மை பகவான் உண்மை என்று ஏற்றுக் கொள்பவனாக இருக்க வேண்டும்.

(4)श्रध्धान - செய்யும்செயலில் ஈடுபாடு உள்ளவனாக இருத்தல் வேண்டும்.


shAsanAth shAsthiram - இத்த செய் இத்த செய்யாதேனு என்று விதிக்கிற படியால் - Directive - that gives Command

வேதம் எதை செய்யச் சொல்கிறது என்பதை விளக்க வேளுக்குடி அவர்கள் தைத்ரீய உபநிஷத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். 


सत्यं वद । धर्मं चर । स्वाध्यायान्मा प्रमदः । आचार्याय प्रियं धनमाहृत्य प्रजानन्तुं मा व्यवच्छेसीः । सत्यान्न प्रमदितव्यम् । धर्मान्न प्रमदितव्यम् । कुशलान्न प्रमदितव्यम् । भूत्यै न प्रमदितव्यम् । स्वाध्यायप्रवचनाभ्यां न प्रमदितव्यम् ।।देवपितृकार्याभ्यां न प्रमदितव्यम् । मातृदेवो भव । पितृदेवो भव । आचार्यदेवो भव । अतिथिदेवो भव ! -
[ तैत्तिरीय उपनिषद् ]


உண்மை பேசு ! சத்தியத்தின் படி நடத்தல் ! வேதம், பிரபந்தம் சொன்ன படி நடத்தல் ! ஆசார்யனுக்கு எது பிடிக்குமோ அதைத் தேடிக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் ! என்ன ஆபத்து வந்தாலும் சத்தியத்தில் இருந்து தவற கூடாது ! நமக்குத் தெரிந்தவற்றை எல்லோர்க்கும் சொல்லுதல் ! -- இதை எல்லாம் சாஸ்திரம் சொல்கிறது. 
Gist : ஆக, (1)செயலில் ஈடுபாடு இருக்கணும் ;(2)ஆஸ்திகத்தன்மை இருக்கணும்; (3)செய் என்று சொன்னதை செய்யணும்; (4)செய்யாதேன்னு சொன்னதை செய்யாதிருக்கணும்;சாஸ்திரம் சொன்ன படி இருந்துட்டால், இவனே பண்டிதன் என்று இரண்டாவது அடையாளம் சொல்கிறார்.