Tuesday, 7 September 2010

Vithura Neethi 13 - Aug 12 2010

Episode : Aug 12 2010

கற்க கசடற கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

படிக்காமல் இருத்தல் கூடாது. எந்த சந்தேகத்திற்கும் இடம் வைக்காமல் கற்க வேண்டும். கற்ற பின், அதற்குத் தகுந்தாப் போலே நடக்க வேண்டும். இதைத் தான் விதுரர் திருதராஷ்டிரனுக்கு சொல்கிறார்.

क्षिप्रं विजानाति चिरं शृणॊति; विज्ञाय चार्थं भजते न कामात्
नासंपृष्टॊ वयौपयुङ्क्ते परार्थे; तत् प्रज्ञानं प्रथमं पण्डितस्य


kṣipraṃ vijānāti ciraṃ śṛṇoti; vijñāya cārthaṃ bhajate na kāmāt
nāsaṃpṛṣṭo vyaupayuṅkte parārthe; tat prajñānaṃ prathamaṃ paṇḍitasya [ 33: 22]


He that understandeth quickly, listeneth patiently, pursueth his objects with judgment and not from desire and spendeth not his breath on the affairs of others without being asked, is said to possess the foremost mark of wisdom.

तत् प्रज्ञानं प्रथमं पण्डितस्य - பண்டிதனுக்கு இருக்க வேண்டிய முதல் அறிவு இது.

क्षिप्रं विजानाति - விஷயத்தை இடம் பொருள் ஏவல் அதற்குத் தக்காப்போலே 
சட்டெனப் புரிந்து கொள்ள வேண்டும். 

चिरं शृणॊति - நீண்ட காலத்திற்குக் கேட்க வேண்டும். ஆராய வேண்டும். கண்டேன் சீதையை என்று அனுமன் சொன்ன பின்னரும், இராமன் ஆராய்ந்து கேட்டு முடிவெடுத்தான்.

இற்பிறப்பு என்பதொன்றும் இரும்பொறை என்பதொன்றும்
கற்பெனும் பெயரது ஒன்றும் களிநடம் புரியக்கண்டேன் (
சுந்தர காண்டம் :கம்ப இராமாயணம்)

विज्ञाय च अर्थं भजते न कामात् - எந்த ஒரு விஷயத்தை தெரிந்து கொள்கிறோமோ, தெரிந்து கொண்ட படி நடக்க வேண்டும். ஒழுக்கத்தை கடைப்பிடித்தல்.  (கற்றபின் நிற்க அதற்குத் தக )

न कामात् - வெறும் ஆசைக்காக இல்லமால், இதை சாஸ்திரம் சொல்லியதாகக் கொண்டு முடித்து விட வேண்டும்.


नासंपृष्टॊ वयौपयुङ्क्ते परार्थे - மூன்றாவது மனிதன் விஷயத்திலே, யாரும் கேட்காமல் அபிப்ராயம் சொல்லுதல் கூடாது. ( த்ரிதராஷ்டிரன் கேட்ட பின்னர் தான் விதுரர் சொல்கிறார், அர்ஜுனனும் கண்ணனிடம் கேட்கிறார். கேட்ட பின் தான் கண்ணன் சொல்கிறான். இராவணன் கேட்காமல் விபீஷணன், சீதை, அனுமார், அங்கதன் ஆகியோர் சொன்னார்கள். ஆனால் அந்த வார்த்தை ஏற்றுக் கொள்ளப்பட வில்லை)

GIST : விஷயத்தை உடனே புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்ட விஷயத்தை நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அதை சாத்திரம் சொல்லியாதக் கொண்டு, புரிந்து கொண்ட படி நடக்க வேண்டும். கேட்காமல் அபிப்ராயம் சொல்லுதல் கூடாது. இவை பண்டித லக்ஷணங்கள்.